சுவடிப்பாதுகாப்பு வரலாறு![]() |
What people are saying - Write a review
மிகச்சிறந்த முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக்கம் பெற்றுள்ளது. சுவடித்துறையில் பல்லாண்டு அனுவம் பெற்றவர் நூலாசிரியர். நூல்களைப் படிப்போரும், பாதுகாக்க விரும்புவோரும் இந்நூலைப் படிக்கவேண்டியது அவசியம். சுவடிப் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடங்கி இக்காலகட்டம் வரையிலான அதன் வளர்ச்சி ஆய்ந்து நுண்ணோக்கி இந்நூலில் எழுதப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாணினியும், தொல்காப்பியமும் சங்க இலக்கிய நூல்களும் நமக்கு இன்றைக்குக் கிடைப்பதற்குக் காரணம் தொன்றுதொட்டு இருந்துவரும் படியெடுத்தல் என்னும் பழக்கம் எப்தை அறியும்போது மிகவும் வியப்பாக உள்ளது. காலங்காலமாக சுவடி வடிவில் நம் முன்னோர்கள் இவற்றைக் காத்து நமக்கு அளித்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய பாதுகாப்புப்பொருள்கள் மற்றும் எளிய முறைகள் பற்றி நூலில் கூறப்பட்டுள்ளது. - பா.ஜம்புலிங்கம்