Kavithai Kadambam: கவிதைக் கதம்பம்

Front Cover
Saba Vadivelu, Oct 19, 2014 - Poetry - 97 pages
1 Review

 

                        கதம்ப மணம்

எண்ணங்களின் இசைப்பே கவிதைகளாம். சிந்தனைக் கருவை வளர்த்தெடுத்து, எழிலுருவம் பெற்றிடத் துணை நிற்பவையே கவி தொடுக்கும் சொற்களாம்.  சக்தி தரும் உணவிற்குச் சுவையூட்டுதல் போன்றதே கவிதை வடிவம் .  இலக்கணம் கடந்து, இன்னோசை தேர்ந்து, எளிமையுடன் வடிக்கப்பெறுவதே மரபுசாராக் கவிதை யெனலாம். வரிகளை ஒடித்து, மடித்து எழுதுதல் அன்று புதுக்கவிதை.  கேட்பவர் விழைந்து கேட்கும் வண்ணம்   பழகு தமிழில் சொல்லும் பாங்கே புதுக்கவிதை. யாப்புச் சுதந்திரம் கவிதையை எண்ணற்றவர்களிடம் எடுத்துச்செல்ல உதவுகிறது. பண்டிதர்களுக்கும் அப்பால் கவிதாரசனை இருப்பது கணக்கில் கொள்ளப்படுகிறது.

               கருத்துவானில் கடிவாளமின்றி கற்பனைத்தேரில் சொல்லேருழவர்கள் பவனி வருவர். எத்துணை எத்துணை கவியுள்ளங்கள் நாளும் தமிழ் வளர்க்கின்றன. எவ்வளவு இயல்பாகவும் எளிதாகவும் வலைகளிலும் வலைப்பூக்களிலும் தளங்களிலும் இணையங்களிலும் மின்னூல்களிலும் உலகளாவிய தமிழ் வாசிப்புகள் ! புத்தம்புதிய எண்ணங்கள், கருத்துருக்கள், ஆக்கங்கள், வார்ப்புகள் சொல்லோவியங்களாய், கலைச் சிற்பங்களாய் நாளும் உயிர்க்கின்றன! வளர்தமிழின் புதுப்புதுப் பரிமாணங்கள் வைகலும் வளர்த்தெடுக்கப் பெறுகின்றனவே !

         இச்சூழல்தந்த துணிவின் விளைவே நானும் கவிதை எழுதத்தொடங்கியது. பலபொழுதில் பல்வகைச் சூழலில் கருக்கொண்ட கருத்துகளைக் கவிதையாக்கிப் பார்த்தேன்;  நம்மைச்சுற்றி நிகழ்வன, நாம் துய்க்கும் சுற்றுச்சூழல், மென்மையான மனித  உணர்வுகளின் ஆளுமை, உறவுகளின் மென்மையும் வன்மையும், வாழ்வின் வசந்தமான இளமையும், கோடையாகிய முதுமையில் தனிமையும், பழைமையும், புதுமையும்,  ஒளிரும் பன்முக மனித ஆற்றல் எனப் பல்சுவை கொண்ட பாக்களைத்தான் வார்த்துள்ளேன்.

            புறநிகழ்வுககளைக் காண்பதையும் கேட்பதையும் உள்ளுவதையும் உணர்வுகளாய் வடித்துள்ளேன். அரசியல், சமுதாய, தனிமனித ஒழுக்கங்களின் வீச்சும் தாக்கமும் எளிய தமிழில் கவிதைகளாய்ப் பதிவுபெற்றுள்ளன. இவற்றின் தொகுப்பே  கவிதைக் கதம்பமாய் உங்கள் கைகளில் தவழ்கிறது. மணம்வீசி உங்கள் கருத்தையும் கவரும் என நம்புகிறேன்.   

கவிதைக் கதம்பத்தின் சுகந்தத்தைச் சுவாசிப்பீர் !

கவிதைகளை வாசியுங்கள் ;

என்போன்ற எளியோர்க்கும் வசமாகும்

வண்டமிழை வாழ்த்துங்கள் !                            

 சபா வடிவேலு

திருச்சிராப்பள்ளி

                                                                                                                                                                                                                                                                                                                                                                                   


 

What people are saying - Write a review

User Review - Flag as inappropriate

எளிய தமிழ்ப் பாடல்களில் வாழ்வியல் பற்றிய கவிதை நூல் .
அன்றாட நிகழ்வுகள் கவிதை வடிவில் விமர்சிக்கப்பெறுகின்றன.
 

Contents

Section 1
7
Section 2
13
Section 3
20
Section 4
53
Section 5
61
Section 6
78
Section 7
79

Common terms and phrases

அகிலம் அசைய அடிமை அண்டம் அதற்கு அதே அரசு அவர்க்கு அழகு அன்று ஆங்கே ஆயினும் ஆனது ஆனதும் இதே இயற்கை இளையோரே இன்று இன்றும் இன்றும் இனிக்கும் இனி இனிது இனிப்பே இனிய உண்டு உத்தமன் உயிரனைத்தும் உயிரினம் உவந்தே உறுதுணை எங்கும் எத்தனை எதனாலே எதிலும் எல்லாம் என் என்பது என எனும் ஒரு விலையும் கண்டும் கணக்கிட கணக்கில் கல்வி கல்வியும் கவிதை கவிதைக் களைந்து காட்டி காடுகள் காத்திடுவோம் காற்றில் குடி குளங்கள் கூடிய கையில் கொடுத்தென்ன கொண்டு கொள்வர் கோடி சக்தி சர்க்கரை சிகரம் சிலர் சுற்றமும் நட்பும் செய்து செய்ய இவர் மாறிடுவர் செல்வம் சென்று சொற்களை சொற்களைத் தமிழ் தருவர் தா தா தா திருவிழா தினம் தூணதுவாம் நண்பர்கள் நாட்டில் நாடி நாளும் நான் நீ நீதான் நீயும் நீயே நூல்கள் படைக்கும் படைப்பின் பல பலர் பள்ளியில் பார்த்து பாரினில் பிள்ளைகள் பின்னும் புகையிலை புதுக்கவிதை பூமி பொய் பொய்த்தது பொருள் போக்கிட போதும் போதெல்லாம் போயின் போற்றி மக்கள் மக்களாட்சி மகத்துவம் மண் மண்டபம் மண்ணில் மண்மாதா மரம் மருத்துவர் மழை மழையே மனித மனிதர் மனிதர்கள் மாதா மானிடரே மீண்டும் முடித்து முதியோர் முயற்சி முழுதும் முன்னம் மொழியாம் யாது செய்ய இவர் யாவும் வந்தேன் வளர்ப்போம் வறட்சி வாழிய வாழும் விரைந்து வெப்பம் வேண்டா வேண்டும்

About the author (2014)

  

   நூலாசிரியர்:

   சபா வடிவேலு -                                                மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்  தொலைநிலைக் கல்வி இயக்குநராகவும்,  முதுநிலை வணிகவியல் பேராசிரியராகவும்  பணி புரிந்து ஓய்வு பெற்றவர். உயர்கல்வித்  துறையில் 37 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.  தமிழ் ஆர்வலர், இலக்கியச் சுவைஞர்,   மரபுசாராக் கவிதை புனைபவர்.                                

குறள் தரும் சிந்தனைகள்     நூலின் ஆசிரியராவார்..

  இவரது  பிற எழுத்துகளை வாசிக்க :-

  இணைய தளம்      : www.sabavadivelu.com  

  இவரைத் தொடர்பு கொள்ள  : -

  மின்னஞ்சல்         : sabavadivelu@gmail.com

  கைபேசி                : 91 + 94422 06051

Bibliographic information